இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் 1ஏ ரக விமானங்களை வாங்க விமானப்படை ஒப்பந்தம்

டெல்லி: இந்துஸ்தான் ஏரோனாட்டிகல்  நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க விமானப்படை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ராணுவத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து ரபேல் உள்ளிட்ட போர் விமானங்களை இந்தியா வாங்கி வருகிறது. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மிக முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகிவுள்ளது. அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டில் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் மார்க் 1ஏ விமானங்களை வாங்க விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது. தேஜஸ் ரக போர் விமானங்கள் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பாகும். ஏற்கனவே தேஜஸ் சுமார்ட் 1 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதன் மேம்படுத்தப்பட்ட ரகமே தேஜஸ் சுமார்ட் 1 ஏ. இதனை தொடர்ந்து, குறைந்த எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போர் விமானம் வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. எதிரிகளின் ரேடார்களை முடக்கும் திறன் கொண்டது. மேலும், ஒன்றை இன்ஜினில் இயங்கக்கூடிய அதிநவீன போர் விமானம் இது எனவும் சொல்லப்படுகிறது.

உள்நாட்டு நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய ஒப்பந்தம் இது. 39 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 83 தேஜஸ் சுமார்ட் 1ஏ போர் விமானங்களை எச்.ஐ.எல். நிறுவனம் வழங்குகிறது. முதலில் 56 ஆயிரம் கோடி ரூபாயை எச்.ஐ.எல். நிறுவனம் கேட்டிருந்தது. ஆனால் ஓராண்டு காலமாக விமானப்படை பேச்சுவார்த்தை நடத்தி தற்போது அது 39 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் விமான தயாரிப்புக்கான பணிகள் தொடங்கும். 3 ஆண்டுகளுக்குள் போர் விமானங்கள், விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. 2022ம் ஆண்டு முதல்முறையாக இந்த விமானம் சோதித்துப்பார்க்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து தேஜஸ் சுமார்ட் 2 ரக போர் விமானங்களை எச்.ஐ.எல். உற்பத்தி செய்யவுள்ளது. வரும் 2023ல் இது சோதிக்கப்படும் எனவும் தெரிகிறது.

Related Stories: