×

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது தொடர்பான தமிழக அரசின் மனு தள்ளுபடி

டெல்லி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது தொடர்பான தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு உள்ளிட்டோரை குன்ற சட்டத்தில் அடைத்து தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தது. பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் உள்பட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். பல ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது. குறைபாடுகளுடன் உள்ளது. எனவே, இவர்களை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்கிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஓராண்டு காலம் முடிந்து விட்டதால் தமிழக அரசு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : Pollachi ,government ,Tamil Nadu ,detainees , Pollachi, Sex Case, Thug Act, Govt
× RELATED வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய ஆர்.எஸ்.பாரதி மனு