×

தொடக்கப்பள்ளிகளில் 50% தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமிக்கலாம்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிமூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் சுமார் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள்  பெரும்பாலும் அதே ஊரை சேர்ந்தவர்களாக இருப்பதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும். அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : primary schools ,schools ,head office ,Ministry of Human Resources Development ,head teachers , Primary School, 50%, Headmaster, Direct, Government-appointed, Ministry of Human Resources Development
× RELATED தமிழ்நாடு முழுவதும் 10,281...