மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக ஆணையர், மெட்ரோ அதிகாரிகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை: மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாக தொழிலாளர் நல ஆணையம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்ரோ தொழிலாளர்களை பணியமர்த்துவது தொடர்பாக சென்னை குறளகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பினை வெளியிட்டார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி நடந்த வேலை நிறுத்தத்தின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட 7 பேரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பணி இடை நீக்கம் செய்த 9 பேரை பணியில் சேர்க்க வேண்டும். மேலும், பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட தேவையற்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உரிய விளக்கமளித்து அவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மெட்ரோ நிர்வாகத்தினை சேர்ந்த பணியாளர்கள் வரும் பிப்ரவரி 25ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பினை வெளியிட்டனர்.

இதையடுத்து பணியாளர்கள் அந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத வகையில், தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை குறளகத்தில் தொழிலாளர் நல ஆணையத்தின் முன்னிலையில் தொழிலாளர் நல ஆணையர், மெட்ரோ நிர்வாகம், பணியாளர்களிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. தொழிலாளர்கள் அவர்களின் கோரிக்கைகளை தொழிலாளர் நல ஆணையரிடம் வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அறிவித்தபடியே 25ம் தேதி தங்களது வேலைநிறுத்தமானது நடைபெறும் என்றும் மெட்ரோ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: