×

மத்திய அரசுடன் நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள் :'வேளாண் மண்டலத்துக்கு அனுமதி வாங்குக'என்ற முதல்வரின் பேச்சுக்கு துரைமுருகன் பதில்

சென்னை: நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள திமுக, வேளாண் மண்டலத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்கித் தர வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தமிழக சட்டசபை இன்று மீண்டும்  கூடியது. அப்போது முன்னாள் உறுப்பினர் சாவித்திரி அம்மாள், ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. குருதி மாவள்ளல்கோன் திரு.பி.ஏ.கே.பி இராஜசேகரன் அவரது மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தமிழக நிதி நிலை அறிக்கை மீதான முதல் நாள் விவாதமானது நடைபெற்று வரும் நிலையில், கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் தங்கமணி, மத்தியில் கூட்டணியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக ஏன் டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். அப்போது விவசாயிகளின் முதல்வரான பழனிசாமி தானே அறிவித்தார் என்றும் தங்கமணி குறிப்பிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் துரைமுருகன் இடையே காரச்சார விவாதம் பின்வருமாறு..

அமைச்சர் தங்கமணி :  மத்தியில் கூட்டணியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக ஏன் டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்கவில்லை. விவசாயிகளின் முதல்வரான பழனிசாமி தானே அறிவித்தார் என்றும் தங்கமணி குறிப்பிட்டு இருந்தார்.

துரைமுருகன் : டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அதிமுக அறிவித்ததை நாங்கள் வரவேற்கின்றோம். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்  நிறைவேற்றி அதன் பின்  வேளாண் மண்டலமாக அறிவித்தால் முழுமனதோடு வரவேற்போம்

துரைமுருகன் :காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பது தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் ஏன் கொண்டு வரவில்லை ?

துரைமுருகன் :: காவிரி பாசன மாவட்டங்களில் வேதாந்த உள்ளிட்ட எந்த நிறுவனமும் எண்ணெய் எடுக்க அனுமதி இல்லை என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றுக

முதல்வர் பழனிசாமி : அதிமுக 37 எம்பிக்கள் இருக்கும் போது சீட்டை தேய்ப்பதாக சொன்னீர்கள் ? இப்பொது நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

முதல்வர் பழனிசாமி : அதிக எம்பிக்களை வைத்துள்ள திமுக வேளாண் மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கி தரலாமே ?

முதல்வர் பழனிசாமி : 3வது பெரிய கட்சி திமுக என்கீறீர்களே செய்ய வேண்டியது தானே ?

துரைமுருகன் : வேளாண் மண்டலத்தை அறிவிப்பது நீங்கள் ? அனுமதியை எங்கள் எம்பி பெற்றுதர வேண்டுமா? மத்திய அரசுடன் எதிரும் , புதிருமாக உள்ளோம். நீங்கள் தான் இணக்கமாய் உள்ளீர்கள்


Tags : speech ,Duraimurugan ,government ,CM ,agriculture zone , DMK, Agriculture Zone, Chief Minister, Plea, Palanisamy, Duraimurugan
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...