மூன்று ஆண்டுகள் நிறைவு முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நான்காம் ஆண்டில் சாதனைகளைத் தொடர எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:  முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துகள். ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி  சாதனை தொடரவும் வாழ்த்துகிறேன். என்று கூறியிருந்தார்.

Advertising
Advertising

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஓர் ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டுகாலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தேமுதிக சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Related Stories: