புதுகை மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு

மணமேல்குடி:  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 350 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்திலிருந்து 200 விசைப்படகுகளிலும் 1000 மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள்  அனைவரும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டினர்.  கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த  சின்னஅடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சுற்றி  வளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக சின்னபாண்டி (48), இவரது மகன் மணிகண்டன்(23), அந்தோணி (55)  ஆகிய 3 பேரை சிறைபிடித்தனர்.

Advertising
Advertising

இதேபோல் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மாரியப்பன், அவரது மகன் சக்திபாலன், சிவலிங்கம், ராஜகுரு ஆகிய 4 பேரையும், கிருஷ்ணமூர்த்தி, அவரது படகில் சென்ற தனபால், மாரியப்பன், முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் இலங்கை  கடற்படையினர் சிறைபிடித்தனர்.

Related Stories: