குமரி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஸ்டிரைக்

நாகர்கோவில்: குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் பால் வடிக்கும் பணியில் நிரந்தர பணியாளர்கள் 800 பேரும், 400 ஒப்பந்த ஊழியர்களும் உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு அளிக்கப்பட  வேண்டும். அந்த வகையில் கடந்த 1.12.2016 முதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இதற்காக 47 முறை பேச்சுவார்த்தை நடந்தும், தோல்வியில்தான் முடிவடைந்துள்ளது.  இந்தநிலையில், வேலை நிறுத்த போராட்டம் குறித்து, நேற்று  மாலையில் நாகர்கோவில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பேச்சுவார்த்தையில் பலன் இல்லாததால் இன்று முதல் ஸ்டிரைக் நடைபெறும் என சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் வல்சகுமார் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: