தருமபுரம் ஆதீனம் பக்தர்களுக்கு ஆசி

சென்னை: தருமபுரம் ஆதீன 27வது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் நேற்று சென்னை வருகை தந்தார். அப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்  என 100க்கும் மேற்பட்ட பக்தர்கள்ஆசி பெற்றனர்.  இதையடுத்து சாமிக்கு வேத விற்பன்னர்கள் மங்கல இசை ஒலிக்க பூர்ணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீசெல்ல முத்துகுமாரசாமிக்கு விசேஷ தீபராதனை நடைபெற்றது. சாமிக்கு சொக்கநாத தம்பிரான், சட்டநாத தம்பிரான் ஆகியோர் மலர் தூவி ஆராதனை செய்தனர். இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதின கல்வி கழக செயலாளர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: