அடுக்குமாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில் 900க்கும் மேற்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆறுமாதமாக வடமாநிலத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கொட்டகை அமைத்து தங்கி, பணியாற்றுகின்றனர். இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சஜாத் (21) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை சஜாத், 7வது மாடியில் நின்று  வேலை செய்து வந்தார்.

Advertising
Advertising

எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சஜாத், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிந்தார். ஒப்பந்ததாரரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சஜாத்துக்கு ரூபிகா (19) என்ற மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பீகாரில் வசிக்கின்றனர்.

Related Stories: