செம்பியம்-செங்குன்றம் சாலையில் தடுப்பு சுவரில் பைக் மோதி பால் வியாபாரி பரிதாப பலி

புழல்: புழல், திருவள்ளுவர் 2வது தெருவை சேர்ந்தவர் மணி (55). பால் வியாபாரம் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு மனைவி நிர்மலா, மகன் மதன்குமார், மகள் சங்கீதா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பால் வியாபாரத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதனால், அவரது மகன் மதன்குமார் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கதிர்வேடு பகுதியில் செம்பியம்-செங்குன்றம் சாலையில் ஒரு தனியார் வீட்டுமனைகளுக்கும் சாலைக்கும் இடையிலான இரும்பு தடுப்பு பகுதியில் மணி இறந்து கிடப்பதாக மதன்குமாருக்கு தகவல் கிடைத்தது.

Advertising
Advertising

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் மதன்குமார் விரைந்து சென்றார். அங்கு தனது தந்தை குடிபோதையில் தடுப்பு சுவரில் மோதி இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு அழுகிய நிலையில் இறந்து கிடந்த மணியின் சடலத்தை கைப்பற்றி, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: