கல்லூரி மாணவி மாயமான வழக்கில் பெண்கள் உட்பட 6 பேர் கைது

சென்னை: உத்திரமேரூர் அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் விவசாயி மகள் சுமதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உத்திரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் உத்திரமேரூர் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்த புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்நிலையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ராஜேஷின் தாய் ஞானசுந்தரி (47), அக்கா லூர்துமேரி, மாமா விஜய் (27), மற்றும் நண்பர்கள்

சார்லஸ் (25), பிரகாஷ் (31) ,சதீஷ் (24) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  மேலும், காணமல்போன மாணவி மற்றும் ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: