பைக் மோதி மூதாட்டி பலி

அண்ணாநகர்: கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (57). பால் வியாபாரி. நேற்று முன்தினம் மாலை வில்லிவாக்கம் அருகே பாடி, தாதங்குப்பம் சிக்னலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த ஒரு பைக் கிருஷ்ணவேணி மீது வேகமாக மோதியது. இதில் கிருஷ்ணவேணி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். பைக் ஓட்டி வந்த வாலிபருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

Advertising
Advertising

தகவலறிந்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணவேணி பரிதாபமாக பலியானார். பைக் ஓட்டி வந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ராஜமங்கலத்தை சேர்ந்த திரிஷ் (29) என்ற வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: