குட்கா பொருட்கள் விற்பனை வடமாநில வியாபாரிகள் கைது

சென்னை: சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி சப் டிவிஷன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், பாதிரிவேடு, கவரப்பேட்டை, சிப்காட் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெரிய கடைகள்,  மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிக அளவு ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வேன்களில் கொண்டு சென்று வடமாநில வாலிபர்கள் விற்பனை செய்து வந்தனர்.  இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாப்பன்குப்பம் பகுதிகளில் ஒரு மினி வேனில் குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக சிப்காட் சிறப்பு காவலர் வில்வமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் குட்கா சப்ளை செய்து கொண்டிருந்த  இருவரை கைது செய்து, விசாரணை நடத்தினர்.விசாரணையில், கடந்த இரு வருடங்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மதன் சிங் (24), குமங்சிங் (27) ஆகியோர் என தெரியவந்தது. பின்பு  அவர்களிடம் இருந்து சுமார் 500 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>