சட்டத்தை மீறுபவர்களை இரும்பு கரத்தால் ஒடுக்க வேண்டும்: டெல்லி போலீசாருக்கு அமித்ஷா அறிவுரை

புதுடெல்லி:  டெல்லி காவல்துறையின் 73வது  நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: சட்டத்தை மீறுபவர்கள் மீது ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டால் கூட, அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு பொறுமையுடன், அதே நேரம் இரும்பு கரம் கொண்டும் போலீசார் ஒடுக்க வேண்டும் என்று நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார்  வல்லபாய் படேல் கூறியதைப் பின்பற்றி, டெல்லி போலீசாரும் நடந்து கொள்ள வேண்டும். டெல்லி நகரின் பாதுகாப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.857 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காக 165 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், 9,300 கேமராக்கள் பொருத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி போலீசாருக்கு கூடுதலாக 700 புதிய வீடுகள் கட்டுவதற்கு, காவலர்கள் வீட்டு வசதி வாரியத்துக்கு ரூ.137 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த விழாவில் சிறந்த சேவை புரிந்த காவலர்களுக்கு அமைச்சர் அமித்ஷா விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

Related Stories: