பாஜவின் நிழல் ரஜினி: நாராயணசாமி குற்றச்சாட்டு

மீனம்பாக்கம்: நடிகர் ரஜினிகாந்த் பாஜவின் நிழலாக செயல்படுவதாக முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். அவர் சென்னை விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: வண்ணாரப்பேட்டையில் அமைதி போராட்டம் நடத்தியவர்களை போலீசாரே உள்ளே புகுந்து, அடித்து துன்புறுத்திய சம்பவத்தால் தமிழகம் முழுவதிலும் போராட்டம் நடக்கிறது.

Advertising
Advertising

ஜனநாயக நாட்டில் ஒரு கருத்துக்கு மாற்று கருத்து சொல்ல உரிமை உண்டு. அதை தடுப்பது ஜனநாயகமல்ல, சர்வாதிகாரம். நடிகர் ரஜினிகாந்த் போகும் பாதையை பார்க்கும்போது, அவர் பாஜவின் நிழலாக செயல்படுகிறார் என தெளிவாக தெரிகிறது.

Related Stories: