ஸ்டாலின் முன்னிலையில் 150 பாஜவினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜவினர் 150 பேர் திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில், நேற்று காலை நாமக்கல் கிழக்கு மாவட்டம், தமிழ்நாடு சோழிய வேளாளர் முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், பாஜ மாநில அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு முன்னாள் தலைவருமான என்.கே.எஸ். சக்திவேல் தலைமையில் 150 பேர் மற்றும் நாமக்கல் நகரத்தைச் சேர்ந்த டாக்டர் என்.தீபக்குமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

Advertising
Advertising

அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் நகரச் செயலாளர் ராணா ஆனந்த், புதுச்சத்திரம் ஒன்றியப் பொறுப்பாளர் எம்.பி.கௌதம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: