குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நெல்லையில் கண்டனப் பேரணி

நெல்லை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் 6000 க்கும் மேற்பட்டோர் கண்டனப் பேரணி நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் 6000 பேர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். விஎஸ்டி பள்ளிவாசல் முதல் ஜின்னா திடல் வரை ஆயிரக்கணக்கானவர்கள் கண்டனப் பேரணி நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: