×

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பு கூறியுள்ளது. நல்ல முடிவாக அறிவிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாக இஸ்லாமிய கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வெண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமாருடன் - இஸ்லாமியர்கள் சந்திப்பு
சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருடன் வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்கள் சந்தித்து வருகின்றனர். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினரான ஜெயக்குமார் தங்களை சந்திக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். போராட்டக்குழுவை சேர்ந்த 25 பிரநிதிகள் அமைச்சரை சந்தித்துப் பேசினர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 3 வது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதை அடுத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

வேலூரில் போராட்டம்:
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து வேலூர் அண்ணா சாலையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபேற்ற போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவையில்  பேரணி:

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் பேரணி நடைபெற்று வருகிறது. காரமடை சாலை முதல் ஒடங்கரை வரை நடைபெறும் பேரணியில் அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்றுள்ளது.


Tags : Islamic Federation ,fight , Citizenship Reform, Struggle, Islamic Federation
× RELATED குடியுரிமை சட்டத்திருத்தத்தை...