×

வாரணாசியில் ஜன சங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை திறந்தார் பிரதமர் மோடி: மேலும் பல திட்டங்கள் தொடக்கம்

உத்தரபிரதேசம்: வாரணாசியில் ஜன சங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று பார்வையிட உள்ளார். பிரதமர் மோடி தமது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இன்று ரூ.1000 கோடி மதிப்புடைய 30 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் வாரணாசியை, மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க புனிதத்தலங்களுடன் இணைக்க உள்ளது. மேலும் 430 படுக்கைகள் கொண்ட உயர்தர வசதிகளுடன் அரசு மருத்துவமனையும், 74 படுக்கைகளைக் கொண்ட இன்னொரு மருத்துவமனையையும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மகா காளி என்ற எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து தற்போது ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரான பண்டிட் தீனதயாள் உபத்யாயாவின் நினைவிடத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ள நிலையில் அதற்கு 63 அடி உயரம் கொண்ட தீனதயாள் உபாத்யாயாவின் சிலையை மோடி திறந்து வைத்தார். இது கடந்து ஓராண்டுக்கு மேலாக 200-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் இந்த சிலையினை வடிவமைத்துள்ளனர். மேலும் நாட்டில் உள்ள தீனதயாளன் சிலைகளில் இது தான் உயரமானது என கூறப்படுகிறது.

Tags : Jana Sangh ,Varanasi ,Dinadayal Upadhyaya ,Dinadayal Upadhyaya Modi ,Janata Dal , Varanasi, Jana Sangh president, Dinadayal Upadhyaya, idol, Prime Minister Modi
× RELATED தமாகா விவசாய பிரிவு மாநில தலைவர் கொரோனாவுக்கு பலி