சிஏஏ -விற்கு எதிராக பெற்ற கையெழுத்தை பிப்.19 ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒப்படைகின்றனர் திமுக எம்பிக்கள்

சென்னை: தி.மு.க. எம்.பி.க்கள் பிப்ரவரி 19-ம் தேதி டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து ஆவணங்களை குடியரசுத் தலைவரிடம் அளிக்கின்றனர். தி.மு.க .சார்பில் தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

Advertising
Advertising

தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது.குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 -ஆம் தேதி வரை திமுக கூட்டணி கட்சிகளின் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 2-ஆம்  தேதி முதல் தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி  கட்சிகள் சார்பில்  கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

சென்னை கொளத்தூரில் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தமாக சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான திமுக கூட்டணியின் கையெழுத்து இயக்கத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து ஆவணங்களை வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவரிடம் அளிக்கின்றனர்.

Related Stories: