மத்திய அரசின் எச்சரிக்கையை மீறி சீனர்கள் 14 பேருடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு அனுமதி: 'கோவிட் - 19'பாதிப்பு என அச்சம்

தூத்துக்குடி: சீனர்கள் 14 பேருடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அதிகாரிகள் அனுமதியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் - 19 பாதிப்பு காரணமாக, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு பல்வேறு நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனர்கள் 14 பேருடன் பனாமா சரக்கு கப்பல் ரூயி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தையே மிரளச்செய்துள்ளது. எனவே இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.

சீனாவிற்கு சென்று திரும்பும் இந்தியர்களை தனிமைப்படுத்தி வைரஸ் பாதிப்பு உள்ளதா என சில தினங்கள் ஆய்வுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பீதியில் உள்ள சூழலில் சீனர்கள் 14 பேர்களை கொண்ட பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் ‛ரூயி தற்போது துாத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கப்பலில் வந்தவர்களுக்கு கோவிட் - 19 சோதனை செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. கப்பலில் வந்த சீனர்கள் வெளியே சென்றுள்ளார்களா என்பது குறித்தும் துறைமுக அதிகாரிகளுக்கு தெரியவில்லை.துறைமுக அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் தமிழகத்திலும் கோவிட் - 19 பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories:

>