CAA-வுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: டி.ஜி.பி. உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர், என்ஆர்சி க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை டி.ஜி.பி. நியமித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர் போலீசாரின் தடியடி நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், போலீசாரின் தடியடியை கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க இந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: