ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல்: அமெரிக்க ராணுவம் அறிவிப்பு

பாக்தாத்: ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் இருந்தவாறு ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. கடந்த சில வாரம் முன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குவாஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் போராக மாறலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் போக போக, இந்த தாக்குதல் அப்படியே நிறுத்தப்பட்டு, போர் அச்சம் குறைந்தது. ஆனால் அவ்வப்போது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஈரான் மூலமே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்கா விலகிச் சென்றாலும் ஈரான் கண்டிப்பாக அமெரிக்காவை தாக்கும் திட்டத்தில் இருக்கிறது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories: