சென்னை மாவட்ட செஸ் தக்‌ஷின், அஸ்வினிகா சாம்பியன்

சென்னை: சென்னை மாவட்ட செஸ் சாம்பியன் போட்டி, விருகம்பாக்கம்  ஆவிச்சி மேனிலைப்பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.  யு7, யு11, யு15, யு19 ஆகிய  பிரிவுகளில் சிறுவர், சிறுமிகளுக்கு என தனித்தனியே போட்டிகள் நடந்தன. சென்னை மாவட்ட செஸ் சங்கம், டிசிஏ அகடமி இணைந்து நடத்திய இந்த போட்டியில் 106 சிறுமிகள், 259 சிறுவர்கள் உள்பட 365 பேர் பங்கேற்றனர். சிறுவர் களுக்கான யு19 பிரிவில் வி.எஸ்.ராகுல், யு15 பிரிவில் ஆர்.அபிநந்தன், யு11 பிரிவில் தக்‌ஷின் அருண், யு7 பிரிவில் ஆர்.நிஜேஷ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். சிறுமிகளுக்கான யு19 பிரிவில் ஆர்.பி.அவந்திகா, யு15 பிரிவில் கீர்த்தனா, யு11 பிரிவில் அஸ்வினிகா, யு7 பிரிவில் ஹர்ஷா பூஜிதா ஆகியோர் சாம்பியன் பட்டம் கைப்பற்றினர். மேலும் இந்த போட்டி மூலம் தமிழ்நாடு அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான சென்னை மாவட்ட அணிக்கும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி சிறுவர்கள் பிரிவில் 17, சிறுமியர்கள் பிரிவில் 24 என மொத்தம் 41 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: