திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்: திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் பொறுப்பாளராக எம்.எஸ். தரணிவேந்தன் நியமிக்கப்படுவதாக் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை : திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.சிவானந்தம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, மாவட்டக்கழகப் பணிகள் செவ்வனே நடைபெற, எம்.எஸ்.தரணிவேந்தன் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertising
Advertising

Related Stories: