×

சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: டெல்லி சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு

டெல்லி: சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி எனத் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேரை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்தது. சீனாவின் ஹுபே மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.

இந்த கொடிய நோய்  1500-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் 30 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 1631 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸால் 67,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி நிலவரப்படி, சீனா மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 5,700 பயணிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

 இந்த விசாரணையில் சீனா மற்றும் கரோனா பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த பயணிகளில் 4,707 பேருக்கு கரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் மற்றவர்களோடு தொடர்பில் இல்லாமல் சுய கண்காணிப்பில் சிறிது நாட்களுக்கு இருக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளோம். அதேசமயம் 17 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 817 பயணிகளைத் தொடர்புகொள்ளவோ, கண்டுபிடிக்கவோ முடியவில்லை. 68 பயணிகள் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள் என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Delhi: Delhi Health Department ,China , China, Delhi, Coronavirus, Delhi Health Department, Intensive Monitoring
× RELATED சொல்லிட்டாங்க…