ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா பாதிப்பு: சீனாவில் நேற்று மேலும் 143 பேர் உயிரிழப்பு

ஜப்பான்: ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், வுகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

Advertising
Advertising

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அந்த கப்பலில் இதுவரை மொத்தம் 218 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது மேலும் ஒருவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி நேற்று மேலும் 143 நபர்கள் பலியாகியுள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் 139 பேர்  உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் 2641 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனா முழுவதும் மொத்தம் 67,535 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: