மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகத்தில் தீவிபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

Advertising
Advertising

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபகாக உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: