மனித உரிமை மீறல் புகார் அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்கு தடை

வாஷிங்டன்: இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு இறுதிபோரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கை ராணுவ தலைமை தளபதி அமெரிக்காவில் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது. இலங்கை நாட்டின் தலைமை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா. இவர் கடந்த  ஆண்டு தான் இந்த பதவியில்  நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனம் சர்வதேச அரங்கில் சர்ச்சைக்குள்ளானது. கடந்த 2009 ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதலின் இறுதி மாதங்களில் வடக்கு தீவின் போர்பகுதியில் நிறுத்தப்பட்ட  இராணுவப் பிரிவுக்கு கட்டளையிடும் அதிகாரியாக சில்வா இருந்தார்.இந்த இறுதிபோரின் போது சுமார் 40,000 தமிழர்களை அழித்தொழித்தனர்.

Advertising
Advertising

இது தொடர்பான போர்க்குற்ற விசாரணையை ஜநா நடத்தி வருகிறது. அதில் சில்வா மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளது. இதன் காரணமாக அவர் அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. இலங்கை இராணுவத்தின் உரிமை மீறல்கள் குற்றச்சாட்டில் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில்  கடந்த 2013 இல் நிறைவேற்றிய தீர்மானத்தில் சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் உரிமை மீறல் எனக் கூறப்படுவதை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், சில்வா நியூயார்க்கில் ஐ.நா. மிஷனில் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றினார்.

Related Stories: