இலங்கை அரசு அறிவிப்பு இலவச விசா திட்டம் ஏப்.30 வரை நீட்டிப்பு : சீனா பெயர் நீக்கம்

கொழும்பு: இந்தியா உள்ளிட்ட 48 நாடுகளுக்கான இலவச விசா திட்டத்தை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலால், அந்நாட்டின் சுற்றுலா துறை கடுமையாக  பாதித்தது. இதனால்,  சுற்றுலா துறையை ஊக்குவிக்க, இலங்கை வந்த பின் விசா எடுத்துக் கொள்ளும் 39 நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனாவையும் சேர்த்தது. அத்துடன், 48 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தையும் கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. இதன்படி, விசா வழங்க தெற்காசிய நாடுகளின் மக்கள் ரூ.1,400ம், பிற நாட்டவர்கள் ரூ.2500ம் கட்டணம் செலுத்த வேண்டியது ரத்து செய்யப்பட்டது.

Advertising
Advertising

இதனால், சுற்றுலா துறை 12 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதற்கிடையே, சீனாவில் கோவிட் வைரஸ் பாதிப்பால் மீண்டும் சுற்றுலா துறை சுணக்கம் கண்டுள்ளதால், இலவச விசா திட்டம் மேலும் 3 மாதத்திற்கு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அமைச்சர் ரமேஷ் பதிரானா தெரிவித்துள்ளார். இருப்பினும், கோவிட் வைரஸ் பாதிப்பால், விசா சலுகை பட்டியலில் இருந்து சீனா நீக்கப்பட்டுள்ளது.

Related Stories: