அதிமுக ஆட்சி மாநில நிதி நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்துவிட்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சி மாநில நிதி நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்துவிட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசின் மொத்த கடனை ரூ.4.56 லட்சம் கோடியாக்கி ஒவ்வொருவர் தலையிலும் ரூ.57,000 கடன் சுமையை ஓ.பி.எஸ் ஏற்றிவிட்டார். தமிழகத்தின் நிதி நெருக்கடியால் தமிழக மக்கள் பெரும் மனக்கலக்கத்தில் உள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.14,000 கோடியில் இருந்து ரூ.25,000 கோடியாக அதிகரித்துவிட்டதாக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நிதி மேலாண்மையில் நிதி அமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு திறமை இல்லை என்பதையே பற்றாக்குறை காட்டுகிறது.

Advertising
Advertising

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.10,000 கோடி என்ன ஆனது என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தொகையை தட்டிக்கேட்க முதல்வருக்கு தைரியம் இல்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய வருவாயில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.7,586 கோடியை பறிகொடுத்துள்ளதாக ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். உள்ளாட்சி நிதி மற்றும் ஜிஎஸ்டி நிலுவை தொகையாக வர வேண்டிய ரூ.10,447 கோடியையும் அதிமுக அரசு பெறவில்லை. ஒரே ஆண்டில் மத்திய அரசு தர வேண்டிய ரூ.18,000 கோடியை அதிமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.பாஜக அரசு மீது துரும்பை கூட தூக்கு போட்டுவிட கூடாது என்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: