நிக்கோலா டெஸ்லா

நன்றி குங்குமம் முத்தாரம்

ஐன்ஸ்டீன், நியூட்டன் அளவுக்குப் புகழ் பெற்றிருக்கக்கூடிய விஞ்ஞானி டெஸ்லா. 1856-ம் வருடம் ஜூலை 10-ம் தேதி குரோஷியாவில் உள்ள ஸ்மைல்ஜன் எனும் இடத்தில் பிறந்தார். இவர் மனித குலத்துக்காக கண்டுபிடித்த விஷயங்கள் ஏராளம். சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட சாதனங்களை அவர் கண்டுபிடித்துள்ளார். அந்தக் கண்டுபிடிப்புகள்தாம்  நம் நவீன வாழ்க்கைக்கு வித்திட்டவை. முக்கியமாக நம் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட ரிமோட்,  ராடார் தொழில்நுட்பம், ஃப்ளோரசன்ட் மின்விளக்கு, X-Ray போட்டோகிராபி போன்ற அத்தனையும் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்தாம்.  நயாகரா நீர்வீழ்ச்சியில் நீர் மின் உற்பத்தி நிலையத்தினை உருவாக்கி மின்சாரத்தை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்தார்.

உலகின் முதல் நீர்மின் உற்பத்தி நிலையமும் இதுவே. வெகு தொலைவில் உற்பத்தியாகும் மின்சாரம் நமக்குக் கிடைக்க அடித்தளமிட்டது டெஸ்லாவின் மூளைதான். டெஸ்லாவின் இந்தக் கண்டுபிடிப்பால் தான் உலகமே இன்று வெளிச்சத்தில் திளைக்கிறது என்றால் அது மிகையில்லை. ரேடியோவிற்காக மூல தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர் டெஸ்லா என்று சொல்லப்படுவதுண்டு. தனது 86-வது வயதில் டெஸ்லா இந்த உலகை விட்டு நீங்கினாலும் அவருடைய கண்டுபிடிப்புகள் காலம் கடந்தும் நிற்கும்.

Related Stories: