டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நாளை மறுநாள் (பிப்ரவரி 16) நடைபெற உள்ளது.இந்நிலையில், தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனTags : Modi ,swearing-in ,Arvind Kejriwal ,Delhi , Chief Minister, Arvind Kejriwal, AAP, PM Modi, Call
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...