தமிழகத்தில் 2019-20ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.30,000 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவிப்பு

டெல்லி: டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரக்கூடிய அமைப்பில் ஒன்றாக டாஸ்மாக், மதுக்கடைகள் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு நடத்தக்கூடிய  மதுக்கடைகள் மூலமாக 2019 - 20 நிதியாண்டில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் பட்ஜெட்டில் 2 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பாலான பங்கு டாஸ்மாக் மூலமாகவே கிடைக்கிறது. அதுமட்டுமின்றி அண்மையில் டாஸ்மாக் விலை ஏற்றத்தின் காரணமாக கூடுதலாக வரும் ஆண்டு 2 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் உட்பட ரூபாய் 12 ஆயிரத்து 263 கோடி தொகை வரவேண்டியுள்ளது எனவும் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த நிலுவை தொகை கிடைக்கப்பெறும் போது பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏனெனில் வரவை விட செலவு அதிகமாக உள்ளது. இதுபோன்ற மத்திய அரசிடமிருந்து நிலுவை தொகையாக கிடைக்கும் பட்சத்தில் கடன் குறைய வாய்ப்புள்ளது. மேலும் மக்கள்நல திட்டங்களை செயல்படுத்த எளிமையாக இருக்கும் என நம்பப்படுகிறது. 


Tags : Krishnan ,FY 2019-20 Krishnan , Tamil Nadu, 201920m fiscal year, it'll Rs 30,000 crore, Finance Ministry Secretary Krishna
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...