×

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்கும் : ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டு அது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.

*ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

*முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும். இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Government ,Annamalai University ,announcement ,OPS ,OPS announcement , Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED தமிழக அரசின் சார்பில் 2020-21ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது அறிவிப்பு