×

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக யாரும் பதவியேற்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக யாரும் பதவியேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேவி, பிரியதர்ஷினி என்ற இருவருக்கும் வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டதால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. முதலில் வெற்றிச்சான்றிதழ் பெற்ற தேவி ஊராட்சி தலைவராக பதவியேற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலில் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவிக்கு ப. சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.


Tags : Supreme Court ,anyone ,Sivaganga District Sankarapuram Municipality , Sivaganga, Sankarapuram, Panchayat leader, post, Supreme Court ban
× RELATED விவசாயிகள் போராட்டம் குறித்து...