×

சங்கரன்கோவிலில் தடையை மீறி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தடையை மீறி இந்து முன்னணியினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  சங்கரன்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து முன்னணி தென்காசி மாவட்ட பொதுச்செயலாளரான மணிகண்டன் மற்றும் அவரது தம்பி, தம்பி மனைவி உள்ளிட்டோர் மணல் கடத்தும் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனராம்.

இதை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து முன்னணியினர் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத் தலைவர் ஆறுமுகசாமி, மாவட்டச் செயலாளர் சிவா,  நகரத் தலைவர் ஆறுமுகம்,  நகரச் செயலாளர் விக்னேஷ்,  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தடையை மீறி இந்து முன்னணியினர்  நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : protests ,Sankarankoil Sankarankoil ,Ban , Hindu Front protests over ban in Sankarankoil
× RELATED இந்து முன்னணி மறியல்