×

கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி உயர்த்தி வழங்கப்படும்: ஓ.பன்னிர்செல்வம்

சென்னை: தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. பத்தாவது முறையாக தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது முறை இவர் நிதி அமைச்சராக இருந்து தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

* பட்ஜெட் தாள்கள் அடங்கிய பெட்டியில் ஜெயலலிதாவின் படம் அச்சிடப்பட்டுள்ளது.

* நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்படும்.

* 2020-21 நிதியாண்டுக்கான தமிழக அரசின் மூலதன செலவு ரூ.36,367.78 கோடியாக இருக்கும்.

* தமிழக அரசின் கடன் ரூ4,56,660.99 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ25.71 ஆயிரம் கோடியாகவும் உள்ளது.

* தமிழ் வளர்ச்சி துறைக்கு 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* காவல்துறைக்கு - 8876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மீன்வளத்துறைக்கு 1,229 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீதி நிர்வாகத்திற்கு 1,403 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உணவுத்துறைக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நெல், சிறுதானியம், கரும்பு சாகுபடி உயர திட்டங்கள் கொண்டு வரப்படும். இதற்கான மானியங்கள் அளிக்கப்படும்.

* திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டாலின் ரூ.77.94 கோடி செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப்பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

* பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அனைத்து அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ75.02 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

* இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் 3041 கோடி ரூபாய் செலவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

* தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாகத்திட்டத்தின் கீழ் 500 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதற்காக 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை பெங்களூர் தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

* அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ கல்லூரியை அரசே ஏற்கும்- கடலூர் மாவட்டத்துக்கான அரசு கல்லூரியாக செயல்படும்.

* முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும். இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு.

* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு.

* அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு ஊழியர்களின் ஊதிய செலவுக்காக இந்த நிதியாண்டில் ரூ.64,208.55 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் கூவம் மற்றும் அடையாறு நதிகளை சீரமைக்க ரூ.5,439 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

* 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.

* ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும்.

* நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்பு பிரிவு அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்.

* கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 76,927 மாணவர்கள் தனியார் பள்ளியில் அனுமதி.

* நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற விகிதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னை, கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ரூ.6448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி 1 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

* கூட்டறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க ரூ. 11000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்காக ரூ.3,099 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று முதல்வர் பசுமைவீடுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித்தர இந்த அரசு முயற்சி செய்யும்.

* தற்போது புதியதாக வகுக்கப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

* தற்போதைய பொருளாதார மந்த நிலையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் போது, தமிழகம் உயர் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.

* 2019-20ல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

* ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர சீரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

* இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதியோர் நலனுக்கான பல முன்முயற்சிகளை அரசு தொடங்கும். இதன் முன்னோட்ட திட்டமாக 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் 37 லட்சம் ரூ செலவில் முதியோர் ஆதரவு மையங்களை அரசு தொடங்கும்.

* கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம் அளிக்கப்படும். 75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 7,233 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோயில்கள் பெயரிலேயே பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

* புதிய தொழில் முனைவோருக்கு மூலதன மானியம் ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்க பட்டுள்ளது.

* முத்திரைத்தாள் வரி 1% இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* நடப்பாண்டில் 10,726 சீருடை பணியாளர்கள் புதிதாக பணி அமர்த்தப்படுவார்கள்.

* சிறப்பு பொக்சோ நீதிமன்றங்கள் உள்பட நீதிமன்ற கட்டடங்களுக்காக ரூ.1,317 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டு உள்ளவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களை பெறும் திட்டம் தொடங்கும்.

* மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 52கி.மீ. மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரு.959.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ., 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள் ரூ.2,298 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

* குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1,364 நீர்ப்பாசன பணிகள் ரூ.500 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

* தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீதான விற்பனைவரி வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயரும் எனவும், மது வகைகள் மீதான விற்பனை வரியும் சீராக வளர்ச்சி அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

* நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020-2021ம் ஆண்டில் ரூ.12 கோடி மதிப்பில் 74,132 ஏக்கரில் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டங்களின் தொழில் நுட்பங்களுடன் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

* கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20 ம் ஆண்டில் ரூ.68.35 கோடி நிதி அள்ளிக்கப்பட்டது. 2020-21 ம் ஆண்டில் ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவியுடன் அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* சென்னை மாநகர கூட்டாண்மை எனும் புதிய திட்டம் தொடங்கப்படும். உலக வங்கியின் நிதி உதவியாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் பெறப்படும் இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு தேவையான ஒப்புதல் பெறப்படும்.

* அரசு உயர் மேல்நிலை பள்ளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்காக ரூ.520.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக ரூ. 218.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 667.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் புதிதாக 6 மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறப்பு பொது விநியோக திட்டத்தில் 2020-21ம் நிதியாண்டிலும் துவரம்பருப்பு, சமையல் எண்ணெய் தரப்படும்.

* 2020-21-ஆம் ஆண்டில் ரூ.20 கோடியில் பூச்சி தாக்குதல் மேலாண்மை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்.

* ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு முறை வரும் மே மாத்திற்குள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

* அம்ருத் திட்டத்திற்கு ரூ.1450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 525 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ. 253.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கோவையில் 2.5 லட்சம் சதுர அடியில் ரூ. 100 கோடியில் எல்காட் அமைக்கப்படும். திருச்சியில் 1 லட்சம் சதுர அடியில் ரூ. 40 கோடியில் எல்காட் அமைக்கப்படும்.

* மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக 2020-21 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்.

* அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 2011-12 முதல் 1060 கால்நடை கிளை நிலையங்களை கால்நடை மருந்தகங்களாகவும், 10 கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனைகளாகவும், 6 பெரு மருத்துவமனைகளையும் 2 கால்நடை மருத்துவமனைகளையும் கால்நடை பன்முக மருத்துவமனைகளாக தரம் உயர்த்தியும் உள்ளது.

* 2011-12 முதல் 614.57 கோடியில் 2037 புதிய கால்நடை மருத்துவ பிரிவு கட்டடங்கள் கட்டப்பட்டதுடன் ரூ.87.20 கோடியில் 1460 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டள்ளன.

* அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ரூ.2,962 கோடியில் செயல்படுத்தப்படும்.

* தமிழகம் முழுவதும் 585 நியாய விலை கடைகளை பொங்கல் பரிசு வழங்குவதற்கு அரசு வழி வகை செய்துள்ளது.

* தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.Tags : restoration ,churches ,Christian ,O. Pannirselvam ,Advocate O. Pannirselvam , Government of Tamil Nadu, Budget, Legislative Assembly, Deputy Chief Minister O. Pannirselvam
× RELATED பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்