×

இந்திதான் தாய்மொழி வர்ணனையாளர் ரசிகர் மோதல்

பெங்களூர்: நடப்பு ரஞ்சி தொடரில் கர்நாடகா-பரோடா மோதும் லீக் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடக்கிறது. அதில் 2வது நாளான நேற்று வர்ணனையாளரில் ஒருவர் திடீரென, ‘‘ ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.  இந்தி எங்கள் தாய்மொழி. இதை விட பெரிய மொழி எதுவுமில்லை’’ என்று கூறினார். அதனை வரவேற்ற மற்றொரு வர்ணணையாளர், ‘நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால் கட்டாயம் எங்கள் தாய் மொழியான இந்தி மொழியை  பேச வேண்டும்’ என்று சொன்னார். இந்த வர்ணனை வீடியோ நேற்று வைரலானதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் கொஞ்சம்....

எம்.ராமசந்திரா: என் தாய் மொழி கன்னடம். எங்கள் மீது இந்தியை திணிக்க வேண்டாம். முனீஷ், பிதர்:  நீங்கள் வர்ணனை செய்கிறீர்களா? பிரசாரம் செய்கிறீர்களா? நிதீஷ் ஷான்பாக்: இந்தி ஒருபோதும் தேசிய மொழி அல்ல என்பதை இவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. அருண் ராம்: 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43.63சதவீத பேர்தான் இந்தி பேசும் மக்கள். பாதிக்கும் மேல் அதாவது 56.37சதவீதத்தினர் இந்தியை தங்கள் தாய் மொழியாகவோ, முதல் மொழியாகவோ கொண்டவர்கள் அல்ல.

Tags : Hindi, mother tongue, commentator fan
× RELATED ஏப்ரல்-01: பெட்ரோல் விலை ரூ.72.28, டீசல் விலை ரூ.65.71