திருச்சி என்.ஐ.டி-யில் பிப்ரவரி 14, 15 ,16 தேதிகளில் தொழில் முனைவோர் உச்சி மாநாடு

திருச்சி: தேசியத் தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி தொழில்முனைவோர் குழுமம் (E-cell) நடத்தும் நிகழ்வுகளில் முதன்மையானது தொழில் முனைவோர் உச்சி மாநாடு(E-summit ) ஆகும். இந்த நிகழ்வானது ஆர்வம் மிகுந்த,வளர்ந்து வரும் இளம் மாணவர் தொழில் முனைவோர் பயன் பெறும் வண்ணம், பலதரப்பட்ட, புதுமையான பணிமனைகளையும்(workshops), திறமை வாய்ந்த,சிறந்த தொழில் முனைவோர்களின்  விருந்தினர் உரைகளையும்,அவர்களோடு உரையாடும் அமர்வுகளையும்,அத்தோடு சில முறைசாரா(informal) நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்த மாநாடு மாணவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காகவும், புத்தாக்க யோசனைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும், தொழில் முனைவோர் ஆர்வத்தினை ஊக்குவித்து அதற்கான பண்பு நலன்களை  மாணவர்களிடையே விதைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்வானது திருச்சிராப்பள்ளி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் பிப்ரவரி 14, 15 ,16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.

விவரம்: //www.ecell-nitt.org

Related Stories: