10 வயது கேரள சிறுவனின் ‘ஜீரோ டிகிரி’ கார்னர் கோல்: வீடியோ வைரலால் பலரும் பாராட்டு

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் விளக்கக்காட்சி பள்ளியின் ஐந்தாம் வகுப்பில் பி.கே.டானி (10) படித்து வருகிறார். இவர், தற்போது கேரள கால்பந்து பயிற்சி மைய (கேஎப்டிசி) கிளப்பில் விளையாடி பயிற்சி பெற்று வருகிறார். 10 வயதான டானி, வயநாடு மாவட்டத்தின் மீனங்காடியில் நடைபெற்ற ஆல் கேரள கிட்ஸ் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

   அவர் போட்டியின் சிறந்த வீரர் என்ற விருதும் பெற்றார். இப்போட்டியின் போது இவர் அடித்த ‘ஜீரோ டிகிரி’ கார்னர் கோல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை முன்னாள் இந்திய கால்பந்து கேப்டன் மணி விஜயனும் பாராட்டி ட்விட் செய்துள்ளார். இதனால், உலகம் முழுவதும் பி.கே.டானி பாராட்டப்பட்டு வருகிறார். இதுகுறித்து டானியின் தந்தை அபு ஹாஷிம் கூறுைகயில், “கால்பந்து டானிக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அவர் அதை மிகவும் நேசிக்கிறார்.

 எத்தனை கால்பந்து வாங்கி கொடுத்தாலும், அவர் எப்போதும் இன்னொன்றைக் கேட்கிறார். அடுத்த ஆண்டு தனது பள்ளி விடுமுறையில் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை சந்திக்க ஸ்பெயினுக்கு செல்ல டானி விரும்புகிறார்’’ என்றார்.

Related Stories: