விளையாட்டு துளிகள்

* ஏப்ரல் 19ம் தேதி தொடங்க இருந்த சீன கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயம், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சியை தொடங்கி உள்ளார். வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு பிப். 15ம் தேதி  இங்கு உடல்தகுதி சோதனை நடைபெற உள்ளது.

* ஐக்கிய அரபு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா - டெனிஸ் ஷபோவலாவ் (கனடா) ஜோடி தகுதி பெற்றுள்ளது.

* இந்தியா லெவன் - நியூசி. லெவன் அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

Related Stories:

>