×

ஆப்பிரிக்காவைப் பூர்விகமாக கொண்ட கின்னிக்கோழி!

கின்னிக்கோழி (Guinea fowl) என்பது கல்லிபார்மஸ் (Galliformes) வரிசையிலுள்ள நுமிடிடாய் (Numididae) குடும்பப் பறவைகள் ஆகும். இவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் உட்பிரதேசத்துக்குரிய உயிரி. நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக உள்ளது. தலைக்கவசக் கின்னிக்கோழியிலிருந்து வளர்ப்பினமாக ஆக்கப்பட்டதுதான் வளர்ப்புக்கின்னிக்கோழி. இது மற்ற பிற விளையாட்டுப் பறவைகளான பெசன்ட்கள் (pheasants), வான்கோழிகள் மற்றும் கௌதாரிகளுடன் தொடர்புடையது. இது 25 முதல் 30 முட்டைகளை இடும். இதன் முட்டைகள் சிறிய, கறுப்பான மற்றும் மிகவும் தடித்த ஓடுடையதாக இருக்கும்.

பெண் கோழிகளுக்குத் தங்கள் கூட்டை மறைத்து வைக்கும் ஒரு பழக்கம் உள்ளது. அடைகாக்கும் காலம் 26-28 நாட்கள் ஆகும். குஞ்சுகளுக்கு ஈரம் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் இவை ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளிலிருந்து வந்தவை. ஈரமான புற்களின் வழியே தாயைப் பின்தொடர்வதன் மூலம் குஞ்சுகள் இறந்துவிடலாம். முதல் இரண்டிலிருந்து ஆறு வார வளர்ச்சிக்குப் பிறகு, வளர்ப்புக் கோழிகளிலேயே ஒரு கடினமான வகையாக இவை உருவாகின்றன. கின்னிக்கோழிகளில் ஆண் பெண் வேறுபாடு அறிவது சேவல்களிலிருந்து பெண் கோழிகளை வேறுபடுத்துவதுபோல் அவ்வளவு எளிதல்ல. இவை பெரியவையாக வளரும்போது, ​​ஆண்களின் தலைக்கவசம் மற்றும் தாடி போன்ற சதையானது பெண்களைக் காட்டிலும் பெரியவையாக உள்ளன.

பெண் கோழி மட்டுமே “பக்-விட்” அல்லது “பொட்-ரக்” என்ற இரண்டு வகைச் சத்தத்தை எழுப்புகின்றன. இதைத் தவிர ஆண் பெண் இரண்டும் பெரும்பாலும் தோற்றத்தில் ஒன்றாகவே உள்ளன. வளர்ப்புக் கோழியாக இவை உண்ணிகள் மற்றும் குளவிகள் போன்ற பல பூச்சிகளை உண்பதன் மூலம்  பூச்சி கட்டுப்படுத்திகளாக உள்ளன. இவை அரிதாகவே அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்படும் இனங்களில் தலைக்கவசக் கின்னிக்கோழியின் “முத்து” அல்லது இயற்கையான வண்ணம் தவிர பல வண்ண வேறுபாடுகள் உடைய கின்னிக்கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளன. வெள்ளை, ஊதா, கரும்பலகை நிறம், சாக்லேட், வெளிர் ஊதா, பவள நீலம், வெண்கலம், காரீயம், பொன்னிறம் மற்றும் பல்வேறு வண்ணங்கள் இதில் அடங்கும்.


Tags : African ,Guinea fowl native , Africa, origin, kinnikkoli!
× RELATED நாடு திரும்பிய தெ.ஆப்ரிக்கா வீரர்கள் 15 நாட்களுக்கு தனிமையில் தங்க முடிவு