×

ஆஸ்கர் நாயகி

நன்றி குங்குமம் முத்தாரம்

ஹாலிவுட்டில் ஒளிப்பதிவுத்துறையில் முத்திரை பதித்து வரும் பெண் ஒளிப்பதிவாளர் ரேச்சல் மோரிசன். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. பொதுவாக ஆண்களின் கையே ஓங்கி நிற்கும் ஒளிப்பதிவில் தனி ஒரு மனுஷியாக கம்பீரத்துடன் நிற்கும் ரேச்சல், இளம் தலைமுறை பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். பள்ளியில் படிக்கும்போதே புகைப்படம் எடுப் பதில் தணியாத ஆர்வத்துடன் இருந்த ரேச்சலை உள்ளூர் சேனல்கள் அரவணைத்துக்கொண்டன. 2005-இல் தொலைக்காட்சி தொடர்களுக்காக இவர் செய்த ஒளிப்பதிவு பரவலாக கவனம் பெற, சினிமா வாய்ப்பு ரேச்சலைத் தேடி வந்தது.

கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் சூழலையும் அழகாக காட்சிப்படுத்தி பல விருதுகளை அள்ளியிருக்கிறார். 2017-ம் வருடம் ‘மட்பவுண்ட்’ என்ற படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் ரேச்சல். சிறந்த ஒளிப்பதிவுக் கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண்மணி ரேச்சல்தான். தவிர, ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘பிளேக் பேந்தரி’ன் ஒளிப்பதிவாளரும் ரேச்சல் மோரிசன்தான்.


Tags : Oscar , Oscar heroine
× RELATED மணம் புரிந்த அரங்கனை இடைமறித்த ரங்க நாயகி