மேஜிக் பேப்பர்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஹாலிவுட் படங்களில் பல வித்தியாசமான கற்பனைகளைப் பார்த்து மெய்சிலிர்த்து ரசித்திருப்போம். அதில் குறிப்பாக ‘ஹாரி பாட்டர்’ படங்களில் இடம்பெற்ற கற்பனைகள் அலாதியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ஆளை மற்றவர்களின் பார்வையில் படாமல் மறைக்கும் சக்தி வாய்ந்த துணிகள் வெகு பிரபலம். இப்படி ஒரு கற்பனைத் துணியையே புருவம் உயர்த்திப் பார்த்தோம். இது மாதிரியான மாயாஜாலங்கள் நிஜத்தில் நடந் தால் என்ன செய்வோம். ஆம்; ஹாரி பாட்டரின் மாயாஜாலத் துணியைப் போல, கனடாவைச் சேர்ந்த ‘ஹைப்பர்ஸ்டெல்த் பயோ டெக்னாலஜி கார்ப்’ என்ற  நிறுவனம் ஒரு மேஜிக் பேப்பரை உருவாக்கியிருக்கிறது.

மெல்லிய பிளாஸ்டிக்கைப் போல இருக்கும் இந்த மேஜிக் பேப்பர் மனித உடலில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள், வெப்பக் கதிர்கள் உட்பட அனைத்து வகையான கதிர்களையும் உள் வாங்கிக் கொள்கிறது. அதனால் இதன் பின்னால் நின்றுகொண்டால் யாருக்கும் தெரியாது. இந்த மேஜிக்  பேப்பருக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறது ‘ஹைப்பர்ஸ்டெல்த் பயோடெக்னாலஜி கார்ப்’.

Related Stories: