×

பாக்டீரியா தொற்றுக்களை கண்டறிய நிறம் மாறும் பேண்டேஜ்கள் உருவாக்கம்

விஞ்ஞானிகள் அதிநவீன் ஸ்மார்ட் பேண்டேஜ் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளனர். இந்த பேண்டேஜ் ஆனது ட்ராபிக் மின் விளக்குகள் போன்று வர்ணம் மாறக்கூடியதாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி பாக்டீரியா தொற்றுக்கு ஏற்றாற்போல் சரியான மருந்தினை வெளியேற்றக்கூடியதாகவும் இருக்கின்றது. இந்த பேண்டேஜ் பச்சை நிறத்தில் காணப்படின் எந்தவிதமான பாக்டீரியா தொற்றும் இல்லை அல்லது மிகவும் குறைந்தளவு பாக்டீரியா தொற்று என்று அர்த்தம்.

அதேபோன்று மஞ்சள் நிறத்தில் காணப்படின் மருந்து வழங்கப்படவேண்டிய பாக்டீரியா தொற்று உள்ளது என்றும், இதற்காக ஆன்டிபயோட்டிக் வழங்கப்பட வேண்டும் எனவும் அர்த்தப்படும். சிவப்பு நிறத்தில் காணப்படின் வலிமையான பாக்டீரியா தொற்று உள்ளது எனவும் இதனை நீக்குவதற்கு மேலதிக மருத்துவ உதவி தேவை எனவும் அர்த்தப்படும். மேலும் இதனை E.coli வகை பாக்டீரியா தொற்று ஏற்பட்ட எலிகளில் வெற்றிகரமாக பரிசீலிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags : Bacterial infection, color, bandages, formation
× RELATED தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில...