உணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள்? கண்டுபிடிப்பதற்கு நவீன சாதனம் உருவாக்கம்

ஆராய்ச்சியாளர்கள் இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய அதிநவீன சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி உணவில் இருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அறிந்துகொள்ள முடியும். உணவிற்கான மாதிரியை வழங்கி இரசாயனப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் இச் சாதனம் செயற்படக்கூடியதாக இருக்கின்றது. அமெரிக்காவில் உள்ள Purdue பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இச் சாதனத்தினை உருவாக்கியுள்ளனர்.

இதனைப் பரீட்சிக்கும் போது குறைந்த வெளிச்சத்திலும் E.coli வகை பாக்டீரியாவை கண்டறிந்து வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சாதனத்தில் இணைக்கப்பட்டுள்ள விரியலாக்கும் இலத்திரனியல் சுற்றானது லேப்டொப் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பவற்றிற்கு புளூடூத் மூலம் தரவுகளை வழங்கக்கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Stories: