×

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோள்!

சமீபத்தில் புதுச்சேரியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு இடம் முடிவாகிவிட்டதாகவும், இந்த ராக்கெட் ஏவுதளம் ஒரு வருடத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா என்ற பெயரில் இந்த ஆண்டுக்குள் செயற்கைக்கோள் அனுப்பப்படும் எனவும், அந்த செயற்கைக்கோள், சூரியனின் தன்மை மற்றும் சூரியனின் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இத்திட்டம் வெகுநாட்களுக்கு முன்பாகத் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா செயற்கைக்கோளை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

Tags : Aditya , Sun, exploration, Aditya satellite!
× RELATED உலகை அச்சுறுத்திய வைரஸ்: கொரோனாவுக்கு...