×

அதிர வைக்கும் ஆய்வு

நன்றி குங்குமம் முத்தாரம்

கடந்த பத்து வருடங்களில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி விண்ணை எட்டிவிட்டது. ஆனால், அடிப்படையான ஒரு விஷயத்தில் நம் கவனத்தையும் பார்வையையும் செலுத்துவதில் கவனக்குறைவாக இருந்துவிட்டோம். ஆம்; குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவை உண்ணுகிறார்கள். அத்துடன் ஆரோக்கியமற்ற, குழந்தைமையற்ற ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். ‘‘உலகம் முழுவதும் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 35 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது அதிக எடையால் ஆரோக்கியமின்றியுள்ளனர்...’’ என்கிறது ‘யுனிசெப்’. இதற்காக இருபது கோடிக்கும் அதிகமான குழந்தைகளிடம் ஆய்வை செய்திருக்கின்றனர்.

முன்பை விட இப்போது குழந்தைகள் உணவு கிடைக்கிறது. ஆனால், அந்த உணவில் எந்தச் சத்தும் இருப்பதில்லை. அடுத்து தொழில்நுட்பத் தால் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல். அதனால் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கவேண்டிய விளையாட்டு, நணபர்கள், குழந்தைப் பருவ நினைவுகள் என்று எதுவுமே கிடைப்பதில்லை. இந்த நிலையை யாருமே பெரிதாக கண்டுகொள்ளாத தும் இதற்கு ஒரு காரணம். இனியாவது குழந்தைகளின் நலனின் அக்கறை எடுத்துக்கொள்ளுமா இந்தச் சமூகம்?

Tags : Stunning study
× RELATED மதுரை உசிலம்பட்டி அருகே பழமையான...